ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

Mahendran

வெள்ளி, 17 ஜனவரி 2025 (18:50 IST)
இன்றைய நாகரீக உலகில், ஸ்பூனில் சாப்பிடுவது அதிகரித்துவிட்ட நிலையில், ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது தான் சுகாதாரமானது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
கையால் உணவு பொருட்களை சாப்பிடுவதில் சில நன்மைகள் உள்ளன. குறிப்பாக, நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுடன் உள்ளே செல்லும் என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும், உணவை தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா, குளிர்ச்சியாக இருக்கிறதா என்பதை கையால் சாப்பிடும்போது எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவல் உடனடியாக மூளைக்குச் செல்லும். அது மட்டும் இல்லாமல், நாம் சாப்பிட போகிறோம் என்பதை மூளை உணர்ந்து, வயிற்றுக்கு தகவல் அனுப்பும். 
 
அப்போது வயிறும் செரிமானத்திற்கு தேவையான அமிலங்களை சுரக்கும் நிகழ்வை ஏற்படுத்தும். எனவே, கையால் சாப்பிடுவதால் தான் அதிக நன்மை உள்ளது என்று கூறப்படுகிறது. 
 
மேலும், கையில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுடன், வாய் தொண்டை மற்றும் குடலுக்கு சென்று செரிமானத்தை எளிதாக்கும். ஆனால் அதே நேரத்தில், கையை நன்றாக கழுவி, சாப்பிட்டால் மட்டுமே இந்த நன்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்