சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (18:56 IST)
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பலவிதமான உணவு கட்டுப்பாடு இருக்கும் நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகத்திற்கு மருத்துவர்கள் பதில் அளித்துள்ளனர் 
 
முட்டையில் ஐந்து விதமான வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் அவை நரம்புக்கு தேவையான பொட்டாசியத்தை வழங்குகிறது. அதேபோல் மூளை வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் வைட்டமின் அதில் உள்ளது. 
 
முட்டையில் அதிக அளவு கலோரிகள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் நாளொன்றுக்கு ஒரு முட்டை சாப்பிடலாம். ஒருவேளை மஞ்சள் கருவை நீக்கி விட்டு வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் அதிகமாக முட்டை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்காது என்ன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்