வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்..!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (19:21 IST)
கோடை காலம் தொடங்கி விட்டதை அடுத்து தமிழக முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கோடையிலிருந்து தப்பிக்க ஒரு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் இருப்பதால் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் என்பது முதலாவது முக்கிய விஷயமாகும். குறிப்பாக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.  வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துக்களை இது ஈடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை அவ்வப்போது குடிக்க வேண்டும். மேலும் அடிக்கடி எண்ணெய் தேய்த்து குளித்தால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளலாம். 
 
அதேபோல் நீர் காய்கறிகளான சுரக்காய், புடலங்காய், பூசணிக்காய் பரங்கிக்காய் ஆகியவையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவ்வப்போது வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்