மழைக்காலத்தில் ஷூ, செருப்புகள் நோய் ஏற்படும்.. ஜாக்கிரதை..!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:20 IST)
shoe
மழைக்காலத்தில் ஷூ, மற்றும் செருப்பு அணிந்து மழை நீரில் நனைந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது  கால்களை சுத்தம் செய்வது மட்டுமின்றி செருப்புகள் மற்றும் ஷூக்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
 
மழை நீர் படுவதால் ஷூக்களை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே  பிரஸ் கொண்டு ஷூக்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு வெயிலில் அல்லது காற்றில் உலர வைக்க வேண்டும் 
 
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஷூக்கள் மற்றும் செருப்புகளை சுத்தம் செய்ய வேண்டும், தினமும் ஷூக்களுக்கு பாலிஷ் போடுவதால் பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் மழைக்காலத்தில் லெதர் ஷூக்களை பயன்படுத்துவதை விட ரப்பர் அல்லது பிவிசி பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் அல்லது செருப்புகளை பயன்படுத்தலாம். ஏனெனில் இதை எளிதாக உலர வைக்க முடியும். 
 
அதேபோல் மழை காலத்தில் ஹீல்ஸ் அணிவதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.  ஷூக்களை அவ்வப்போது தண்ணீரில் சோப்பை கலந்து அதில் நனைத்து சுத்தம் செய்யலாம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்