பெண்கள் மாதவிடாய் காலங்களில் இருக்கும் போது, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது குறித்து டாக்டர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்த உலகில் உயிராக பிறந்த அனைருமே ஏதோ ஒரு வகையில் இனவிருத்தி செய்வதை இயற்கையாக கொண்டுள்ளனர். அதுவும் மனிதன் தனது தனது இணையுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவன். இதனாலேதான், செக்ஸில் மனிதன் மட்டுமே வெற்றி பெற்றுள்ளான்.
ஆனால், செக்ஸ் வைத்துக் கொள்ள சில கட்டுப்பாடுகள், முறைகள் உள்ளது. இந்த இயற்கை முறையை தாண்டும் போது பலவித நோய்களுக்கும், சிரமத்திற்கும் உள்ளாக நேரிடுகிறது.
இதில் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் இருக்கும் போது, ஆண் அந்த பெண்ணிடம் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா அல்லது கூடாதா என்பது பலரின் சந்தேகம்.
இதகான தீர்வு குறித்து பிரபல டாக்டர் ஒருவரிடம் கேட்ட போது, பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையாக சாதாரணமாக நடைபெற கூடிய ஒரு நிகழ்வு. அப்போது, கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.
மாதவிடாய் நாட்களின் போது கர்ப்பபையின் உட்புற சுவர்கள் பலவீனம் அடையும். கூடவே, இரத்தப் போக்கு உள்ளதால் எளிதில் தொற்று நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
அந்த சமயத்தில், செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதால், அடுத்து வரும் அந்த 3 நாட்களில் மேலும், அதிக ரத்தபோக்கு. வலி. எரிச்சல், கர்ப்பபையில் கட்டி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால், மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொளண்டால், பெண்களுக்கு வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள், மன உளைச்சல் போன்றவை நீங்கும்.
மேலும், மற்ற நாட்களை விட இந்த தருணத்தில் அதிக திருப்தி கிடைக்கும். ஆனால், இவைகளுக்கு உங்களது பாட்னர் சம்மதம் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். இல்லை எனில் விட்டுவிட வேண்டும். மற்ற ஒரு நல்ல தருணத்திற்காக காத்திருக்க வேண்டும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் கூடினால் மகிழ்ச்சியும், அதிக இன்பமும் ஏற்படும் என்றார்.