கூந்தல் உதிர்வை தடுக்க இந்த இயற்கை முறை மூலிகைகளை முயற்சி செய்யுங்கள்!!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (10:31 IST)
கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த இயற்கை முறை மூலிகைகள் உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை காண்போம்..


 


# மாங்கொட்டையை எடுத்து, உள்ளிருக்கும் பகுதியை அரைத்து, இதனுடன் வேப்பம்பூ, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யலாம்.

# கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசலாம்.

# வெட்டிவேர், பட்டை, வெந்தயம் இவற்றுடன் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் வெயிலில் வைத்து வடி கட்டிக்கொள்ளுங்கள். இதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வரலாம்.

# ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்து, வாரம் ஒரு முறை அரைத்து தலைக்குக் குளிக்கலாம்.

# கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலர வைத்து, வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்குத் தேய்த்துக குளிக்கலாம்.
 
அடுத்த கட்டுரையில்