புதினாவும்... அதன் வியக்கவைக்கும் மருத்துவ குணங்களும்....

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (20:26 IST)
புதினாவின் ஆரோக்கிய நன்மைகள் பல உண்டு. இது ஒரு மூலிகை இலை. இவை இலைகளாகவும், எண்ணெய்யாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களை விரிவாக காண்போம்...

 
# புதினா ஒரு கிருமிநாசினி. இதனால் இது பெரும்பாலும் பற்பசை, சூயங் கம் போன்றவற்றில் பயன்படுத்தபடுகின்றது. வாய் துர் நாற்றத்தையும் களைகிறது.
 
# புதினாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 
 
# புதினாவை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, செரிமானத்தை வலுப்படுத்தும் என்சைம்களை ஊக்குவிக்கிறது. உமிழ்நீர் சுரப்பியை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் விரைந்து நடக்கிறது.
 
# அஜீரணத்தை சரிசெய்ய, ஒரு கைப்பிடி புதினாவை எடுத்து நீரில் ஊறவைத்து, அந்நீரை பருகி வர, அஜீரணம் சரியாகும். 
 
# தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் தலைவலியும் அதனால் உண்டாகும் குமட்டலும் நீங்கும்.
 
# புதினாவில் ரோச்மரினிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம், சுவாச மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை தடுக்கிறது. சுவாச கோளாறுகள் உள்ளவர்கள், தினசரி உணவில் புதினாவை சேர்த்துக் கொள்ளலாம். 
 
# புதினாவில் கலோரிகள் மிகவும் குறைவு. நார்சத்து மிகவும் அதிகம். இவை கொழுப்பை எரித்து ஆற்றலாக மாற்ற உதவுகின்றன.
 
#  புதினாவில் வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் அதிகமாக உள்ளது. ஆகவே, புதினாவை உட்கொள்வதால், கண் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
 
# புதினாவில் இயற்கையாகவே வலி நிவாரண தன்மை உள்ளது. புதினா எண்ணெயை இதனை தசைகளில் தடவும்போது, தசைகள் இளகி வலி குறைகிறது.
 
# புதினா கொசு விரட்டியாகவும், பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்