சர்க்கரை நோயாளிகள் மைதாவை தொடவே கூடாது..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (19:54 IST)
மைதா என்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் மைதாவை சர்க்கரை நோயாளிகள் தொடவே கூடாது என்றும் கூறப்படுகிறது. மைதாவை தொடர்ந்து அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிடும் என்று கூறப்படுகிறது. உடல் நலத்துக்கு தீங்கான உணவுகளில் ஒன்று மைதா என்றும் கோதுமையில் இருக்கும் சத்துக்களில் சிறிதளவு கூட மைதாவில் இல்லை என்றும் கூறப்படுகிறது. கோதுமையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்தான் மைதா என்றும் இதில் ரசாயன பொருள்களை பயன்படுத்தி வெள்ளையாக மாற்றுவதால் இது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் கூறப்படுகிறது. 
 
மேலும் இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் என்றும் உடம்பில் கொழுப்பு அதிகரித்து இதய கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
கோதுமை அளவுக்கு மைதாவில் நார்ச்சத்து இல்லை என்பதால் மலச்சிக்கல் ஏற்படும் என்றும் இதில் வேதிப்பொருட்கள் இருப்பதால் செரிமான கோளாறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்