தினமும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (17:46 IST)
ரெட் ஒயினை தினமும் இரவு ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.

 
மது பானங்களுள் மிகவும் அதிகம் பேர் விரும்பி அருந்தும் மது ஒயின். அதிலும் குறிப்பாக ரெட் ஒயின் என்றால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். பெரும்பாலும் பெண்கள் விரும்பி குடிப்பது ஒயின்.
 
ரெட் ஒயின் தொடர்ந்து குடிப்பதால் இளமையான தோற்றம் பெறலாம். நொய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
 
ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால் புற்றுநோய், கல்லீரல் நோய் போன்ற தாக்கத்தை தடுக்கலாம். ரெட் ஒயினில் மெலடோனின் என்னும் தூக்கத்தைத் தூண்டும் உட்பொருள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ரெட் ஒயினில் மெலடோனின் இருப்பதற்கு காரணம், அது கருப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படுவதே ஆகும். 
 
எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.
 
ரெட் ஒயின் புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும் சக்தியைக் கொண்டது. எனவே நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தி இருந்தால், அந்த சிகரெட்டின் தாக்கத்தில் இருந்து விடுபட, ரெட் ஒயின் குடியுங்கள். இதனால் உடலினுள் ஏற்பட்ட அழற்சியின் அளவு குறைந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
 
மேலே குறிப்பிட்ட நன்மைகள் எல்லாம் ரெட் ஒயினை அளவாக எடுத்து கொண்டால் மட்டுமே. அதிக அலவில் எடுத்துக்கொண்டால் மற்ற மதுபானங்கள் போல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை இதற்கும் உண்டு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்