இருட்டு கடை அல்வா: இதிலும் ஆரோக்கியம்...

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (18:38 IST)
திருநெல்வேலி என்றால் முதலில் நினைவிற்கு வருவது இருட்டு கடை அல்வா. இதன் சுவைக்கு பலர் அடிமை. ஆனால், இந்த அல்வாவில் உள்ள ஆரோக்கியமான விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளுங்கள்...
இந்த அல்வா செய்முறைக்கான முக்கிய பொருட்கள் சம்பா கோதுமை, கருப்பட்டி, நெய், ஏலக்காய் தூள். இந்த முக்கிய பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய பலன்கள் பின்வருமாறு...
 
சம்பா கோதுமை:
சம்பா கோதுமையில் அதிக அளவு ஊட்டசத்துக்கள் உள்ளது. கால்சியம், நார்சத்து, ஒமேகா 3, ஒமேகா 6, கரைய கூடிய கொழுப்புகள் மற்றும் புரத சத்துக்களை கொண்டுள்ளது.
 
கருப்பட்டி:
சர்க்கரையை விட பல மடங்கு உடலுக்கு நன்மைகளை தருகிறது கருப்பட்டி. சித்த மருத்துவத்திலும், ஆயர்வேத மருத்துவத்திலும் கருப்பட்டிக்கென்றே தனி மருத்துவ குணம் உண்டு. 
 
இது ஜீரண பிரச்சினை, நுரையீரல் சார்ந்த கோளாறுகள் மற்றும் தொண்டை சளியை குணப்படுத்தும். இதிலும் புரதம், தாதுக்கள், மாவுசத்து, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் ஆகிய ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. 
 
நெய்:
அளவான அளவு நெய், உடலுக்கு நன்மையே தரும். இது குடல் புண்களை குணப்படுத்தி, சரும அழகை பராமரித்து, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். 
 
ஏலக்காய்:
ஏலக்காய் உணவு பொருட்களின் சுவையை மட்டும் கூட்டாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பல் சார்ந்த நோய்களுக்கும், செரிமானத்தை தூண்டவும், மலட்டு தன்மை குணமடையவும் இது வழி செய்யும். 
 
புரதம், நார்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் எ, சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதிலும் அதிகம் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்