எலும்பு தேய்மானத்தை போக்கும் பேரீச்சம் பழம்..

Webdunia
சனி, 5 மே 2018 (13:27 IST)
பேரீச்சம் பழத்தை உண்பதால், இரும்பு சத்து கிடைக்கும் என்பது தெரிந்ததே. ஆனால், அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக இது உள்ளது. அவை என்னவென்பதை காண்போம்...
 
# பேரீச்சம் பழத்தில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம்,  பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது.  
 
# பேரீச்சம் பழம், ரத்தசோகையை போக்கும். முடி உதிர்வை தடுக்கும். மேலும், ரிபோஃப்ளோவின், நியாசின், ஃபோலேட்,  வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்களை கொண்டது. 
 
#தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் நீங்கும். 
 
# இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது.  எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.
 
# இதில் இருக்கும் நிகோட்டின் அளவு, குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல்  கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது. 
 
# உடலில் ஏற்படும் அல்ர்ஜி மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இது இருக்கிறது. 
 
# நரம்பு  மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்