திராட்சை விதைகளில் புரோ ஆன்தோ சயனிடின் 80 உள்ளது. அதே போல் நாம் உண்ணுகின்ற மற்ற பழங்களிலும், காய்கறிகளிலும், தேநீரிலும் கூட இச்சத்து உள்ளது.
* திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது.
* உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றிப் புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தியாக உதவுகிறது. திராட்சைப் பழத்துடன் விதைகளைச் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும்.
* ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதன் விதைகளை உண்டு வந்தால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மலச்சிக்கலுக்கும், மூலத்துக்கும் நல்ல மருந்து. மேலும், ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
* வைட்டமின்-சியை விட இருபது மடங்கு சக்தியுள்ளது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுகிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சைப் பழவிதை குறைக்கிறது.
* ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.
* ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டி ராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.
* சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி கண்களில் ஒளியைத் தருகிறது.
* பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் நோய்களிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. வயதான நாட்களில் ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.