வெயில் காலத்தில் காது, மூக்கு, தொண்டை பிரச்சனை வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வியாழன், 20 ஏப்ரல் 2023 (18:52 IST)
கோடை காலத்தில் காது மூக்கு தொண்டை பிரச்சனை பலருக்கு வரும் நிலையில் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.
 
வெயில் காலத்தில் காது மூக்கு தொண்டை பிரச்சனை அதிகம் வரும் என்றும் உடலில் உள்ள நீர் சத்துக்கள் குறைவதால் இந்த பிரச்சனை வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் குளிர்ந்த நீர் குளிர்ந்த பானங்கள் அடிக்கடி பருகுவதால் மூக்கடைப்பு, தும்மல் ஆகிய பிரச்சினைகள் வரும் என்றும் அதனால் காது வலி தொண்டை வலி வருகிறது என்று கூறப்படுகிறது. 
 
எனவே குளிர் பானங்களை காட்டிலும் எலுமிச்சை சாறு, டீ போன்றவற்றை அருந்தலாம் எல்லாம் என்றும் முடிந்தவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மிக அதிகமாக குளிர்ந்த பானங்களை அருந்த கூடாது என்றும் வலியுறுத்தப்படுகிறது. 
 
அதேபோல் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சில நிமிடங்கள் கழித்து குளிர் பானங்களை குடிக்க வேண்டும் என்றும் உடனே குடிப்பதால் தொண்டை காது பிரச்சனை வரலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்