கடும் வெயில் எதிரொலி: தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்..!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (14:43 IST)
கடும் வெயில் எதிரொலியால் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.
 
நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் அடிக்கும் நிலையில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
 
இந்த கடிதத்தில் பெரு, சிறு நிறுவனங்களில் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் வேண்டும் என்றும், பணியிடங்களில் குடிநீர் வசதியை உறுதி செய்ய மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என்றும்,  கட்டுமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் அவசர கால ஐஸ் பெட்டிகள், வெப்ப நோய் தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 
மேலும் சுரங்க தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தின் அருகிலேயே ஓய்வு எடுக்க இடம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்