பேதி, பித்த வாந்தி, பெரும்பாடு குணமாக..இதைச் செய்யுங்கள்

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (23:49 IST)
காசம்
 
கரிசாலை சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் ஆகிய இரண்டையும் சேர்த்து தைலப்பக்குவத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு அரை அல்லது ஒரு தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை உட்கொள்ள குணம் தெரியும். வாரத்தில் ஒரு நாள் தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.
 
ஒழுகும் ரணங்கள்
 
ஊமத்தன் இலைச்சாறு 500கிராம், தேங்கய் எண்ணெய் 200கிராம், மயில் துத்தம் 20 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஊமத்தன் இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஓரளவு சாறு சுண்டியவுடன் துத்தத்தை பொடித்துச் சேர்த்து தைலத்தை பக்குவமாக வடித்துக் கொள்ளவும். இதை வெளிப்பூச்சாக மட்டும் உபயோகிக்கலாம், காது நோய்க்கு காதில் சில துளிகள் விடலாம்.
 
குழந்தைகளின் கபம், மாந்தம்
 
ஆமணக்கு எண்ணெய் அரை லிட்டர், இளங்கொழுந்து சாறு 1 லிட்டர், கருஞ்சீரகத்தூள் 15 கிராம், கோரோசனை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் கோரோசனை நீங்கலாக மற்றவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடித்துக் கொண்டு கடைசியாக கோரோசனத்தை பொடித்துப் போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும், தாய்ப்பாலுடன் 8 மிலி தைலைம் சேர்த்து ஒரு வேளை கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்