பச்சை வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:51 IST)
சர்க்கரை நோயாளிகள் பொதுவாக வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டாலும் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். 
 
பச்சை வாழைப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கும் நிலையில் பச்சை வாழைப்பழம் வயிற்று பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது என்றும் அது மட்டுமின்றி உடலில் சுரக்கும் அமிலங்கள் காரணமாக ஏற்படும் குடல் புண் அல்சர் ஆகியவற்றை தீர்த்து வைக்கும் என்று கூறப்படுகிறது 
 
சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பச்சை வாழைப்பழங்களை சாப்பிடலாம் என்றும் அதில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது
 
அதேபோல் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்றும் அதில் அதிக ஆற்றல் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்