சர்க்கரை அளவு திடீரென்று குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

புதன், 16 நவம்பர் 2022 (20:21 IST)
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை விட ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது மிகவும் ஆபத்தானது. எனவே சர்க்கரையின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உடல் சோர்வு அடிக்கடி சிறுநீர் கழித்தல் உள்பட ஒருசில அறிகுறிகள் சர்க்கரை அதிகரித்ததன் அறிகுறி என்றால் சர்க்கரை நோய் குறைவதற்கான அறிகுறிகள் சரியாக உணவு உண்ணாமல் இருத்தல் புரதச் சத்து இல்லாத உணவை உண்ணுதல் இன்சுலின் போட்டுவிட்டு சாப்பிடாமல் இருத்தல் ஆகியவை காரணங்களாக உள்ளன 
 
இந்த நிலையில் திடீரென சர்க்கரை குறைந்ததாக தெரிந்தால் உடனடியாக இனிப்பு வகை ஏதாவது சாப்பிடவேண்டும். சாக்லேட் அல்லது மிட்டாய்களை உடனடியாக சாப்பிடலாம் அல்லது ஜூஸ் அருந்தினால் சக்கரை அளவு ஓரளவு அதிகரிக்கும் 
 
சர்க்கரையின் அளவு குறைந்தால் சிலருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சர்க்கரை நோய் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
 
அவ்வப்போது மருத்துவரிடம் சென்று சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்