பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது? ஏன்?

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (17:05 IST)
பழங்களை சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை வேளை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காலை வேளையில் பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்...


 
 
# உடல் எடையைக் குறைக்க முயல்வோர் காலை வேளையில் கட்டாயம் ஒரு பழத்தையாவது சாப்பிட வேண்டும். 
 
# அனைத்து பழங்களிலும் கொழுப்புக்களைக் கரைக்கும் வல்லமை அதிகம் உள்ளது. 
 
# ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், பெர்ரி மற்றும் தர்பூசணி போன்றவை மிகவும் சிறப்பான காலை உணவுகள். 
 
# இவற்றில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் இருப்பதால் காலை வேளையில் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
 
# பழங்கள் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். 
 
# பழங்களை காலையில் சாப்பிட்டால் உடலில் சேர்ந்த டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி செரிமானம் மேம்படும்.
 
# பழங்களை காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் உடல் செயல்படுவதற்கான ஆற்றல் கிடைக்கும்.
 
# காலையில் பழங்களை பரிந்துரைப்பதற்கு மற்றொரு காரணம், இவற்றில் நொதிகள் அதிகம் நிறைந்துள்ளது. நொதிகளானது உடலின் பல்வேறு இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.
அடுத்த கட்டுரையில்