அஜீரணத்தால் அவஸ்தையா..? இதொ இருக்கு எளிய தீர்வு!

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (12:01 IST)
சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் புதினா இலைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. புதினா இலைகளின் நன்மைகளை இங்கு தெரிந்துக்கொள்வோம்... 
 
1. புதினாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.  
 
2. புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க உதவுகிறது. 
 
3. அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்து கொள்ளும்போது, செரிமானத்தை வலுப்படுத்துகிறது.  
 
4. தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலி குமட்டல் குறையும்.  
 
5. புதினாவில் கலோரிகள் மிகவும் குறைவு, நார்சத்து அதிகம். ஆகவே, எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள், உணவு பட்டியலில் புதினாவையும் சேர்த்துக் கொள்ளாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்