உணவகங்களில் உணவை முடித்தவுடன், பில் கவுண்டரில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கிண்ணத்தில், பச்சை அல்லது வெள்ளை நிறப் பெருஞ்சீரகம் இருப்பதை பார்த்திருப்போம். பலரும் அதை வாயில் போட்டு மெல்லும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இது வெறும் வாய் புத்துணர்ச்சிக்கு மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல், பென்சோன் போன்ற எண்ணெய்கள், செரிமான நொதிகளை தூண்டி, உணவை விரைவாகச் செரிக்க உதவுகின்றன.
அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால், பெருஞ்சீரகம் பசியை கட்டுப்படுத்தி, தேவையில்லாத நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க உதவும்.