இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு மனநல பிரச்சனை: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (18:53 IST)
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு மனநல பிரச்சனை இருப்பதாக அணமையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


 

 
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் பெங்களூரில் இயங்கும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் அண்மையில் மனநலம் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது.
 
இந்த ஆய்வு 40,000 இந்தியர்களிடம் நடத்தப்பட்டுள்ளது. இதுவே உலகின் இரண்டாது மிகப்பெரிய ஆய்வு என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டதாவது:-
 
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு மனநல பிரச்சனை உள்ளது. அதில் 10 சதவீதம் பேருக்கு பொதுவான மனநல பிரச்சனைகள் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 1% பேர் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணங்களுடன் வாழ்கின்றனர்.
 
சிலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்திற்கும் குறைந்தவர்கள் மட்டுமே மருத்துவ உதவியை நாடுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்