புற்றுநோய்க்கு புகையிலை மட்டும் காரணமா? ஒரு அதிர்ச்சி ஆய்வு

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (00:35 IST)
புற்றுநோய் என்பது ஒரு கொடிய வகை நோய். இந்த நோய் வந்துவிட்டால் கிட்டத்தட்ட மரணம் தான் என்ற நிலை உள்ளது. இந்த புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பிடிப்பதாலும், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பதாலும் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புகையிலையினால் மட்டுமின்றி வேறு பல நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினாலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவை என்னென்ன பொருட்கள் தெரியுமா?


 


பாலிஷ் செய்யப்பட்ட கோதுமை, ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய், வண்ணச்சாயங்கள் பூசப்பட்ட பற்பசை, ரசாயன கலப்புடன் கூடிய ஊறுகாய், அஸ்பார்ட்டேம் (Aspartame) என்ற செயற்கை சுவையூட்டி உள்ள குளிர்பானங்கள், மைக்ரோவேவ் அவனில் தயாரிக்கப்படும் பாப்கார்ன்கள், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள், பாக்கெட்டுக்களில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை புற்று நோய்க்கு காரணமாக அமைகின்றன.

மேலும் மது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாய்ஸ்சரைசர்களில் இருக்கும் மினரல் எண்ணெய், மெர்குரி அதிக அளவில் உள்ள அழகு க்ரீம்கள், பெண்கள் கண் இமைகளில் பயன்படுத்தும் மஸ்காரா, மக்னீசியம் சிலிகேட், ஆஸ்பெஸ்டாஸ் போன்ற மூலப்பொருட்கள் கலந்த டால்கம் பவுடர், உடல் நாற்றத்தை போக்குவதாக கூறப்படும் டியொடரென்ட், இமிடாசோலிடினைல் யூரியா கலந்த நெயில்பாலிஷ், தலைமுடிக்கு அடிக்கும் ஸ்பிரே, லிப்ஸ்டிக் ஆகியவைகளும் புற்றுநோயை வரவழைக்கும் காரணிகளாக உள்ளன.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே புற்றுநோய் உள்பட அனைத்து நோய்களில் இருந்தும் தப்பித்து ஆரோக்கியத்துடன் வாழமுடியும். இன்றைய கம்ப்யூட்டர் உலகில் இயற்கையோடு இணைந்து வாழ்வது கொஞ்சம் கடினம்தான் என்றாலும் முடிந்தவரை முயற்சி செய்வதில் தவறில்லை.
அடுத்த கட்டுரையில்