முக அழகை கெடுக்கும் முகப்பருக்கள் வராமல் தடுப்பது எப்படி?

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (00:57 IST)
முகத்தில் பரு வளர்வது என்பது இளைஞர்களுக்கு ஒரு தீராத பிரச்சனை. குறிப்பாக இளம்பெண்கள் முகப்பரு வராமல் பாதுகாக்கவும், வந்த முகப்பருவை நிக்குவதற்கும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.




 



இந்த நிலையில் மரபணு பிரச்சனை, ஹார்மோன்கள் பிரச்சனை போன்ற பல காரணங்களால் உண்டாகும் முகப்பருக்களை சில எளிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவே சரிசெய்துவிட முடியும். அந்த வழிகள் குறித்து தற்போது பார்ப்போம்

1. நாம் அடிக்கடி போடும் மேக்கப்பில் எண்ணெய்ப்படை அதிகமாக இருக்கும். இந்த பசைகள் பாக்டீரியாக்களுக்கு நல்ல உணவாகி பின்னர் அவைகளே முகப்பருக்களாக மாறிவிடுகிறது. எனவே மேக்கப்பை அளவோடு போட வேண்டும். அதேபோல் மேக்கப்பை ஒருசில மணி நேரங்களில் கலைத்துவிட வேண்டும்

2. மேக்கப்பை நீக்கிய பின்னரும் அதில் சில எண்ணெய்ப்பசைகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றையும் நீக்க  நல்ல ஸ்கிரப் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின்னர் முகத்துக்கு ஆவி பிடித்தால் முகப்பருக்கள் ஏற்படாது.

3. முகப்பருக்கள் வராமல் பாதுகாக்க சன்ஸ்க்ரீன் லோஷனை பயன்படுத்தலாம். குறிப்பாக வெயில் காலங்களில் இந்த லோஷன் முகத்தை சூர்ய கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றுவதோடு பருக்கள் உருவாகுவதையும் தடுக்கின்றது

4. முகப்பருக்கள் உண்டாவதற்கு இன்னொரு முக்கிய காரணம் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே தினமும் 10 முதல் 12 கிளாஸ் தண்ணீரை குடித்தால் முகப்பருவதை தடுக்கலாம்

5. புதினா, எலுமிச்சை, தேன், வேப்பிலை, மஞ்சள், தயிர் போன்ற வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தினால் பக்க விளைவுகளை தடுப்பது மட்டுமின்றி முகப்பெருக்கள் வராமலும் காத்து கொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்