கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறைகள்

Webdunia
கர்ப்பகாலம் பெண்களின் மறுபிறப்பு என்பார்கள். பத்துமாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. அதற்கு தாயானவள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.


 
 
* கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படம் மாற்றங்கள் இயல்பானவையே.
 
* கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி தாய்மாராக இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 300 கலோரி சத்துள்ள உணவு எடுத்துக் கொள்வது அவசியம். அதாவது, சராசரியாக சாப்பிடும் உணவோடு, வயிற்றிலிருக்கும் சேய்க்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். 
 
* கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 6 டம்ளர் பால் அருந்த வேண்டும். இது குழந்தைக்கு தேவையான கால்சியம் இதில் குழந்தைக்கு கிடைத்து விடும்.
 
* தலைவலி, ஜுரம், சளி, பல் வலி போன்றவைக்கு டாக்டரிம் கேட்காமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம். சூடு தன்மை உள்ள பழங்கள் காய்கள், உண்வுகள் அதிகம் சாப்பிடவேண்டாம்.
 
* சாப்பிட கூடாத பழங்கள்: கொய்யா , பப்பாளி, அன்னாசி, கருப்பு திராட்சை. 
தினம் சாப்பிட வேண்டிய பழங்கள்: ஆப்பிள், பச்சை திராட்சை, மாதுளை, ஆரஞ்ச்.
 
* போலிக் அமிலத்தோடு சமச்சீர் புரதமும் சேர்த்து எடுக்கும்போது கரு வளர்ச்சி தரமாகவும், வலுவாகவும் இருக்கும். அதோடு நாம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளும்போது அதனுடன் போலிக் அமிலமும் இருந்தால் இரும்புச் சத்து கிரகிப்பு மிக அதிகமாக இருக்கும்.
 
* போலிக் அமிலம் அதிகமாக உள்ள கீரைகளான பசலைக் கீரை, புளிச்சக்கீரை, அசைவ உணவுகளான முட்டை, ஈரல், பால், நெய், வெண்னை, உலர்ந்த திராட்சை, பீன்ஸ், துவரை, சோயா, தேங்காய், முளைக் கட்டிய பயறுகள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, பீட்ரூட், காரட், முட்டைக்கோஸ், புருக்கோலி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப்ழம், ஆராஞ்சு, பீச், முழு தானிய உணவுகள், பாதாம், பிஸ்தா ஆகியவர்றில் கனிசமான போலிக் அமிலங்கள் இருக்கின்றன.
அடுத்த கட்டுரையில்