டி.ஆர்., மோடி கூட்டணியில் ஒரே தில்லானா இசை கச்சேரி (வீடியோ இணைப்பு)

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (13:27 IST)
சமீபத்தில் ஆப்பிரக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தான்சானியா நாட்டில் டிரம்ஸ் வாசித்தார். இதனை வைத்து இணையவாசிகள் குறும்புத்தனமான ஒரு இசைக்கலவை வீடியோவை உருவாக்கி உள்ளனர்.


 
 
இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என பல திறமைகளை கொண்ட விஜய.டி.ராஜேந்தர் ஒரு பேட்டியில் தன் வாயாலேயே டிரம்ஸ் வாசிப்பது போன்ற இசையை இசைத்துக் காட்டியிருந்தார்.
 
தற்போது அதனையும், பிரதமர் மோடி தான்சானியா பிரதமர் காசிம் மஜாலிவா உடன் டிரம்ஸ் வாசித்த காட்சியையும் இணைத்து நெட்டிசன்கள் புதிய வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

 

 
 
ஏற்கனவே பிரதமர் மோடி டிரம்ஸ் வாசித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் இணையவாசிகள் உருவாக்கி உள்ள இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்