2019 - ல் உலகில் சிறந்த டாப் 10 விளையாட்டு வீரர்கள்...

Webdunia
சனி, 28 டிசம்பர் 2019 (16:24 IST)
இந்த வருடத்தில் உலகில் சிறந்த டாப் 10 விளையாட்டு வீரர்களை கீழே காணலாம்.

!) கால்பந்து விளையாட்டில் நட்சத்திர வீரராகக் கொடி கட்டிப் பறப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர், போர்சுகல்   தேசிய அணியின் கேப்டனாகவும்,  ஜூவெண்ட் கால்பந்து கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.  இவர் ,  உலகில் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை 6 முறை வென்றுள்ளார். உலகில் அதிகம் சம்பாதிக்கும் நட்சத்திர வீரர்களின் பட்டியலில் இடம்  பெற்றுள்ள இவர், இவ்வாண்டில்  750 கோடி வருமானம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.உடலை பிட்டாக வைத்துக் கொள்வதிலும் கில்லாடி இவர்.
2) உலகக் கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் முதலிடம் திகழ்பவர் விராட் கோலி. இவர் , இந்திய அணியை திறம்பட வழிநடத்தி பல் வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். பல கிரிக்கெட் ஜாம்பாவான்கள் மட்டுமல்ல பிற விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும்  அவரை புகழ்ந்துள்ளனர். . இவரது ஆண்டு வருமானம் 178 கோடி ஆகும். டெஸ்ட் போட்டியில் 27 சதங்களையும் , ஒருநாள் போட்டியில் 42 வது சதங்களை நிறைவு செய்துள்ளார். இவரது ஒட்டுமொத்த சராசரி 60 க்கு மேல் உள்ளது.
3) ஸ்பெயில் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் தொழில்முறை டென்னிஸ் வீரர் ஆவார். இவர் களிமண் மைதானத்தில் இவரை வீழ்த்துவது சிம்ம சொப்பனம. ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் உள்ளிட்ட தொடர்களில் மொத்தம் 69 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
4)சுவிட்சர் லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பெடரர். 19 கிராண்ட் சிலாம் எனப்பெறும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் வீரர்களுள் மிக அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர் என்ற புகழுக்குரியவராவார் ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் உள்ளிட்ட தொடர்களில் மொத்தம் 93 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
5)அமெரிக்காவைச் சேர்ந்தவர் மேக் வெதர். உலகல் அளவிளான தொழில்முறை குத்துச் சண்டையில் ஆதிக்கம் செலுத்தி உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளார்.
6)உலக அளவினால செஸ் கிராண் ஸ்லாம் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் மேக்னஸ் கார்ல்சன்.  இவர், முந்தைய கிரேண்ட் மாஸ்டரான  இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தை வீழ்தியது குறிப்பிடத்தக்கது.
7)மகளிர்  டென்னிஸில் புகழ் பெற்ற வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.  அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100 வெற்றிகளை பெற்று சாதனை புரிந்தவர்.ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய தொடர்களில் மொத்தம் 41 வெற்றிகளைப் பெற்றுள்ளார். 
8)இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பார்முலா ஒன் கார் பந்தய வீரர் லீவிஸ் ஹாமில்டன். இவர் மெர்சிடஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் அமெரிக்காவில்  நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பங்கேற்ற  ஹாமில்டன் அதில் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
9)இந்தியாவில் தெலுங்கானாவை சேர்ந்தவர் பி.வி. சிந்து. பாட்மி2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் நடந்த உலக வாகையாளர் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.
10)ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித். இவர் டெஸ்ட் அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் வரிசையில் 10 வது இடம் பிடித்துள்ளார். இவர்  டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ள மொத்த ரன்கள் 7148 ஆகும். ஒருநாள் போட்டிகளில் 3810 ரன்கள் எடுத்து, ஒட்டுமொத்த சராசரி 50க்கு மேல் ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்