ஏடிஎம் கார்ட் இல்லாமல் கேஷ்!! இது எப்படினு தெரியனுமா?

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (15:31 IST)
பொதுத்துரை வங்கியான எஸ்பிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு நவமபர் மாதம் எஸ்.பி.ஐ. யோனோ என்ற டிஜிட்டல் பேங்கிங் சேவையை அறிமுகம் செய்தது. 
 
இந்நிலையில், யோனோ கேஷ் என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலம் ஏடிஎம் கார்ட் இல்லாமலே பணம் எடுக்கலாம். இது எப்படினு தெரியனுமா? 
 
வாடிக்கையாளர்கள் முதலில் யோனோ கேஷ் மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதில், 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும். 
அதன் பின்னர், இந்த எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எஸ்எம் அனுப்பி உறுதிசெய்யப்படும். உறுதி செய்யப்பட்டதும், ஏடிஎம்களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் கார்ட் தேவைப்படாது. 
 
இந்த சேவையை அறிமுகம் செய்ததன் மூலம் இந்தியாவலேயே முதல் முறையாக கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை வசதியை முதலில் அளிக்கும் வங்கியாக எஸ்பிஐ உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்