சியோமி சர்ப்ரைஸ்: ஏப்ரல் 25-க்கு தயாராகுங்கள் வாடிக்கையாளர்களே..

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (14:45 IST)
சீன நிறுவனமான சியோமி தனது புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. 
 
சியோமி நிறுவனம் Mi A1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான Mi A2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த ஆண்டு Mi 5X ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi A1 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிமுகமாகும் Mi 6X ஸ்மார்ட்போன் இந்தியாவில் Mi A2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
 
ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்ற தகவல் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த ஸ்மார்ட்போன் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 
 
ஆனால், Mi 6X ஸ்மார்ட்போன் பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது. அவை,
 
# 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட்
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
# 20 எம்பி மற்றும் 8 எம்பி பிரைமரி கேமரா
# 20 எம்பி செல்ஃபி கேமரா 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்