உங்கள் தகவல் திருடப்பட்டுவிட்டதா? பேஸ்புக் கூறுவது என்ன?

புதன், 11 ஏப்ரல் 2018 (10:40 IST)
பேஸ்புக் நிறுவனத்திற்கு கேம்ப்ரிசிஜ் அனலிடிகா விவகாரம் இடியாய் வந்து இறங்கியது. இந்த விவகாரம், பேஸ்புக் மீது இருந்த நம்பிக்கையை கேள்வி குறியாக்கிவிட்டது.
 
கேம்ப்ரிடிஜ் அனலிடிகா பயனர்களின் தகவல்களை ரகசியமாக சேகரித்து தேர்தல் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக பேஸ்புக் டேமேஜ் கண்ட்ரோல் மோடில் இயங்கி வருகிறது. 
 
பேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஒன்பது கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டத்தாக மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். இதனால், யாருடை தகவல் திருடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள பேஸ்புக் புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது. 
ஆம், பேஸ்புக் நியூஸ் ஃபீடில் (news feed) அந்நிறுவனம் சார்பில் நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படும். உங்களது தகவல்கள் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மூலம் எடுக்கப்பட்டு இருந்தால், பேஸ்புக் நோட்டிஃபிகேஷனில் ஒரு லின்க் கிடைக்கும்.
 
நோட்டிபிகேஷனில் இருக்கும் லின்க்-ஐ கிளிக் செய்து நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்