மீண்டும் விலை குறைந்தது சியோமி ஸ்மார்ட்போன்!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (13:16 IST)
சியோமியின் போகோ ப்ராண்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை மீண்டும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.  
 
கடந்த ஆண்டு வெளியான போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு ரூ.19,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 
 
அதன் பின்னர் குறுகில கால சலுகையாக ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சலுகை நிறைவடைந்ததையடுத்து மீண்டும் இந்த சலுகையை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது சியோமி நிறுவனம். 
போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:
# 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
# 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) 
# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
# 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
# 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்