ஜியோவின் புதிய கட்டண மாற்றங்கள்: லாபம் யாருக்கு??

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (14:17 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசங்களை வழங்கி பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது. தற்போது தண் தணா தண் சலுகை நிறைவு பெருவதையடுத்து புதிய கட்டணங்களை விதித்துள்ளது.


 
 
புதிய கட்டணங்கள்:
 
# ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. 
 
# தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.399 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
# தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களில் இருந்து 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
# ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு அதிக டேட்டா வழங்கப்படுகிறது. 
 
லாபம்: 
 
# ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் திட்டத்தை பொருத்தவரை ஜியோவிற்கு 50 சதவீத லாபம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 
# மேலும், கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டதம் மூலம் ஜியோ முன்பைவிட அதிக அளவு லாபம் பெறும் என தெரிகிறது.
 
# ஜியோ பீச்சர்போன் அறிமுகம், ஜியோ ஃபைபர், 4ஜி வோல்ட் மற்றும் இதர சலுகைகளால் மேலும் அதிக லாபத்தை அடையும்.
 
அடுத்த கட்டுரையில்