மால்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க... சில டிப்ஸ்!!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (10:15 IST)
ஜிமெயில் கணக்கு தற்போது பலரின் உபயோகத்தில் உள்ளது. சில சமயங்களில் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் ஒன்றாகவும் இது இருக்கிறது.  


 
 
ஜிமெயில் கணக்கை பாதுகாப்பதற்கு இதோ சில டிப்ஸ்....
 
# டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் (Two step verification) பாதுகாப்பிற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இதனுடன் உங்கள் மொபைல் நம்பரை இணைப்பதால் ஒன் டைம் பாஸ்வேர்ட் (One time password) இன்றி உங்களது கணக்கை இயக்க முடியாது.
 
# எச்டிடிபிஎஸ் (HTTPS) பாதுகாப்பு தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பும் முன் அவற்றை என்க்ரிப்ட் செய்ய உதவும். இது நமது முக்கிய தகவல்கள் திருடப்படுவதில் இருந்து பாதுகாக்க உதவும்.
 
# அக்கவுண்ட் ஆக்டிவிட்டி குறித்து தெரிந்து கொள்ள ஜிமெயில் லாஸ்ட் சீன் அக்கவுண்ட் ஆக்டிவிட்டி எனும் பட்டனை கிளிக் செய்து ஜிமெயிலில் உங்களது பயன்பாட்டை பார்த்துக்கொள்ளலாம். 
 
# பாதுகாப்பு இல்லாத செயலிகளை பயன்பட்டினை குறைக்க வேண்டும். இல்லையேல் இது ஹேக்கர்களுக்கு சாதகமானதாகி விடும்.
 
# ஜிமெயில் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை கன்காணிக்க செக்யூரிட்டி செக் கப் ஆப்ஷன்களை கிளிக் செய்து பயன்படுத்திகொள்ளலாம்.
அடுத்த கட்டுரையில்