பாரத ஸ்டேட் வங்கியின் யோனா அப்ளிகேசனை மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதற்கு 6 இலக்க அடையாள எண் வழங்கப்படும். பணம் தேவையென்றால் ஏ.டி.எம்மிற்கு சென்று யோனா பதிவு எண்ணையும், பாஸ்வேர்டையும் பூர்த்தி செய்து தேவையான பணத்தை பெற்று கொள்ளலாம். எடுக்கப்படும் பணம் குறித்த தகவல்கள் உடனடியாக குறுஞ்செய்தியாக மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சேவையை தற்போது பல லட்சம் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த யோனா திட்டத்தை நாடு முழுவது உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் செயல்படுத்தவும், ஏடிஎம் கார்டுகளை கைவிடவும் பாரத ஸ்டேட் வங்கி முடிவெடுத்திருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்திற்கும் கார்டுகள் இல்லாமல் யோனா கேஷ் மூலம் பணம் செலுத்து வகையில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.