காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துகளை நீக்கி அதை யூனியன் பிரதேசமாக மாற்றும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக முன்கூட்டியே பாதுகாப்புக்காக இராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்திய ராணுவம் காஷ்மீரி மக்களிடையே அத்துமீறி நடந்து கொள்வதாகவும், வன்முறையை பிரயோகிப்பதாகவும் காஷ்மீரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷீலா ரசீத் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஷீலாவின் இந்த பதிவை பார்த்து கொந்தளித்த பலர் அவரை கைது செய்ய வேண்டும் என ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர்.
இந்நிலையில் ஷீலாவுக்கு ஆதரவாக இந்தி நடிகை சோனம் கபூர் கருத்து தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இதனால் சோனம் கபூரை ஆண்டி இந்தியன் என்றும், அவரையும் கைதுச் செய்ய வேண்டும் என்றும் பலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.