புத்தாண்டு பரிசாக அடிப்படை வட்டியை குறைத்த எஸ்.பி.ஐ

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (18:49 IST)
வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை கடன் விகிதத்தை எஸ்.பி.ஐ வங்கி குறைத்துள்ளது.

 
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ கடன்களுக்கான வட்டி விகிதத்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,
 
கடன் வட்டி மற்றும் முதன்மை கடன் விகிதங்கள் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்போது 8.95%  உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வட்டி விகிதம் குறைப்பு நடவடிக்கை மூலம் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்