சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் வெளியாகின. இதனைத்தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.