சீன நிறுவனமான சியோமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது.
பிப்ரவரி 28 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் இந்த சிறப்பு சலுகை விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 6 ப்ரோ 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரியும், மற்றொரு 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி என வேரியண்ட் மாடலாக விற்பனையாகிறது.
இவற்றின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999 ஆகும். ஆனால், இப்போது ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.11,999 மற்றும் ரூ.13,999 என விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, ப்ளிப்கார்ட் தவணை முறை வசதி, ரூ.11,950 வரை எக்சேஞ் ஆஃபரையும் வழங்குகிறது.