சந்தைகளில் பருப்புகளின் விலை 300 ரூபாயை தாண்டும் என்று வேளாண் உற்பத்தி சந்தை கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி காரணமாக பருப்பு வகைகளின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இந்நிலையில், நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை காலம் துவங்க உள்ளதால் பருப்பு விலை மேலும் அதிகரிக்கும் என வேளாண் உற்பத்தி சந்தை கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது கிலோ ரூ.220க்கு விற்கப்படும் துவரம் பருப்பு, இனி வரும் நாட்களில் ரூ.300 ஐ தாண்டும் எனவும், வரத்து மற்றும் தேவைக்கு ஏற்பட்ட பருப்பு வகைகளின் விலை வேறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள பாசிப்பருப்பின் விலை மட்டுமே அடுத்த 2 மாதங்களில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற பருப்பு வகைகளின் விலைகள் குறைய வாய்ப்பு இல்லை என வாணிப கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டதால் விலை உயர்ந்ததாகவும், இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்ததால் பயிர்கள் பெரிய அளவில் சேதமடைந்ததால் விலை உயர்ந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில் அதானி மற்றும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பதுக்கலும், சூதாட்ட வணிகமுமே காரணம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி குறைந்துள்ளதால் ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.