விலை சொல்லாமல் விற்பனைக்கு... சாம்சங் வழியில் ஒப்போ!!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (18:01 IST)
ஒப்போ நிறுவனம் தனது ஏ53 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. 
 
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக் மற்றும் ஃபேன்சி புளூ நிறங்களில், ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில் இதன் விலை குறித்த தகவல்கள் இல்லை. இருப்பினும் ரூ.15,000 இருக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ஏ53 சிறப்பம்சங்கள்
# 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
# அட்ரினோ 610 ஜிபியு, ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒஎஸ் 7.2
# 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் 
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்