விரைவில் ஜியோ கேப்ஸ்: இதிலும் ஏதேனும் இலவசமா??

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (11:29 IST)
2017 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயன்பாட்டு சார்ந்த டாக்ஸி சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


 
 
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த டாக்ஸி சேவை ஆரம்பத்திலேயே சிறந்த சேவையாக இருக்கும் வண்ணம் சுமார் 600 கார்கள் இதில் களம் இறக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்த சேவை ரிலையன்ஸ் ஜியோ கேப்ஸ் என்று பெயரிடப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த டாக்ஸி சேவையின் வெளியீடு திட்டம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால் அதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு பின்பே இதன் வணிக ரீதியிலான சேவை தொடங்கும் என்றும் செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
 
இதனால் ஓலா, உபெர் போன்ற ஆப் சேவை நிறுவனங்கள் ஜியோ கேப்ஸ் வெளியீட்டு அறிவிப்பை குறித்து கலக்கத்தில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்