750 ஜிபி 4ஜி டேட்டா; அட்வான்ஸ் 2018 ஆஃபர்: ஜியோ அதிரடி!!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (17:49 IST)
ஜியோவிற்கு போட்டியாக மற்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை தொடர்ந்து புது புது சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதிலும் டேட்டாவை முக்கியமாக வைத்து வாடிக்கையாளர்களை கவர பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.
 
இவ்வாறு இருக்கையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 2018 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை பட்டியல் வருகிற மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சலுகையின் படி ஒரு வருடத்திற்கான இலவச அழைப்பு மற்றும் 750 ஜிபி 4ஜி டேட்டா சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை கூகுள் இன் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாம்.
 
மேலும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான நெட்வொர்க் இலவச அழைப்புகள் கிடைக்கும். இந்த சலுகை ரூ 9,999-க்கு கிடைக்கும். சமீபத்தில் ஜியோ ரூ.509 மற்றும் ரூ.799 திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்