11 ரூபாய்க்கு 4ஜி டேட்டா: ஜியோ அதிரடி ஆட் ஆன் சலுகை!

புதன், 31 ஜனவரி 2018 (15:11 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனதி ரீசார்ஜ் திட்டத்தின் மீது சலுகைகளை வழங்கிவரும் நிலையில் தற்போது ஆட் ஆன் திட்டங்கல் மீது சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ஆட் ஆன் சலுகைகளில் வழங்கப்படும் டேட்டா விவரங்களை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி ரூ.11-க்கு கிடைக்கும் சலுகையில் 400 எம்பி டேட்டாவும், ரூ.21-க்கு 1 ஜிபி டேட்டா, ரூ.51 விலையில் ரூ.3 ஜிபி டேட்டா மற்றும் ரூ.101 திட்டத்தில் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
ஆட் ஆன் சலுகைகளை தினசரி டேட்டா பயன்படுத்தியதும், ரீசார்ஜ் செய்து பெற்று கொள்ள முடியும். ஆட் ஆன் திட்டங்களுக்கான வேலிடிட்டி அறிவிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் திட்டத்தோடு இந்த ஆட் ஆன் திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிகிறது. 
 
ஆட் ஆன் திட்டங்களை பலமுறை பயன்படுத்த முடியும் ஆனால், முதல் வவுச்சரில் வழங்கப்பட்ட டேட்டா தீர்ந்தால் மட்டுமே அடுத்த முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆட் ஆன் சலுகைகள் ஜியோ அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மை ஜியோ செயலியில் வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்