9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

Siva

வியாழன், 24 ஜூலை 2025 (09:53 IST)
சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 9.42 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளும், 2.63 லட்சம் IMEI எண்களும் முடக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் சஞ்சய் பண்டி, மோசடி மற்றும் டிஜிட்டல் குற்றங்களுடன் தொடர்புடைய 9.42 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளையும், 2.63 லட்சம் IMEI எண்களையும் மத்திய அரசு தடை செய்துள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும், சைபர் குற்றங்களைத் தடுக்கவும், ஒருங்கிணைக்கவும் "சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்" உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக, "தேசிய சைபர் குற்ற புகார் போர்ட்டல்" என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சைபர் குற்றப் புகார்களை இந்த போர்ட்டல் மூலம் பதிவு செய்யலாம் என்றும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த நடவடிக்கைகள் டிஜிட்டல் மோசடிகளைக் குறைத்து, பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்