அஜித் தான் அடுத்த முதல்வர்: பிரபல சாமியார் ஆரூடம்

செவ்வாய், 30 ஜனவரி 2018 (22:47 IST)
கோலிவுட் திரையுலகில் இருந்து கமல், ரஜினி இருவருமே அரசியலுக்கு வந்துவிட்டனர் என்றே கூற வேண்டும். மேலும் விஷாலும் விஜய்யும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வர தயாராகி வருகின்றனர். இன்னும் ஒருசில நடிகர்களுக்கும் அரசியல் ஆசை உள்ளது.

இந்த நிலையில் பழநியில் இருக்கும் ஒரு சித்தர் வரும் தேர்தலில் திடீரென அரசியலில் குதிக்கும் அஜித் தான் அடுத்த முதல்வர் என்றும் இது கண்டிப்பாக நடக்கும் என்றும் கூறி வருகிறாராம்

அஜித்துக்கு பெர்சனலாக ஒரு பிரச்சனை வரும் என்றும், அந்த பிரச்சனைக்காக அவரை ஒருசிலர் சீண்டிவிட அதனால் அவர் திடீரென அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடிப்பதும் உறுதி என்றும் அந்த சாமியார் கூறி வருகிறாராம்

சென்னை வெள்ளம் உள்பட அவர் முன்கூட்டியே ஆரூடம் கூறிய பல விஷயங்கள் நடந்துள்ளதால் அஜித் முதல்வராவதும் நடக்கும் என்றும் அந்த பகுதியில் நம்ப தொடங்கிவிட்டனர். ஆனால் இவையெல்லாம் சாத்தியமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்