100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!

வியாழன், 12 அக்டோபர் 2017 (11:51 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக 100% கேஷ்பேக் ஆஃபரை வழங்கியுள்ளது. 


 
 
இந்த தீபாவளி சலுகை அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 18 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. தண் தணா தண் சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக் வழங்கப்பட உள்ளது.
 
அதோடு, அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்தக்கூடிய தள்ளுபடி கூப்பன்களை வழங்கவுள்ளது.
 
ஜியோ தீபாவளி சலுகையை பெற ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.400 மதிப்புள்ள எட்டு சலுகை கூப்பன்கள் வழங்கப்படுகிறது. ஒரு கூப்பனின் மதிப்பு ரூ.50.
 
இந்த கூப்பன்களை நவம்பர் 15 ஆம் தேதிக்கு மேல் பயன்படுத்த முடியும். ஒரு சமயத்தில் ஒரு கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் ஜியோ சலுகைகளின் வேலிடிட்டியை பொருத்து தீபாவளி சலுகை நீட்டிக்கப்படுகிறது. 
 
இது மட்டுமின்றி ரிசார்ஜ் கட்டண திட்டங்கள் வரும் 19 ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்