ஜனவரி 31 ஆம் தேதி தான் கடைசி நாள்: மத்திய அரசு திடீர் உத்தரவு எதற்கு??

Webdunia
சனி, 7 ஜனவரி 2017 (10:22 IST)
பென்ஷன் திட்டம் (EPS) மற்றும் பிற ஓய்வூதிய திட்டங்களின் பலனை பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


 
 
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் அட்டை பெறாதவர்கள் ஆதார் சேர்க்கை எண்ணை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆதார் எண் இல்லையெனில் என்ன செய்வது?
 
இன்னும் ஆதார் எண்ணைப் பெறவில்லை என்றால் அல்லது இன்னும் இனிமேல் தான் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் பின்வரும் ஆவணங்களை ஓய்வூதிய திட்டங்களின் கீழ் சமர்ப்பிக்க வேண்டும்.
 
# ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அளித்த அடையாள சான்றிதழ், யூஏஎன்.
 
# ஓய்வூதிய உறுப்பினர் அல்லது ஓய்வூதியம் பெறும் சந்தாதாரின் ஆதார் சேக்கை ஐடி அல்லது ஆதார் சேர்க்கை கோரிக்கைக்கான நகல்.
 
# வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ( ஏதேனும் ஒன்று ) சமர்பிக்க வெண்டும்.
 
மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஓய்வூதிய உறுப்பினர்களுக்கு உதவுதற்காகச் சில ஏற்பாடுகளையும், இலவச சலுகைகளையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே சலுகைகளைப் பெற ஆதார் விவரங்கள் தேவை என்று ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்