சமூக வலைத்தளமான டிவிட்டரில் #IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
மைக்ரோ பிளாகிங் தளத்தில் பிஎஸ்என்எல் 4ஜி பிரபலமானதை தொடர்ந்து, டிவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் #Switch_To_BSNL டிரெண்டானது. தற்போது #IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி தனது 4ஜி சேவையை துவங்க இது சரியான நேரம் என்றும் வர்த்தக்க வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுக்கும் பயனர்கள் மீது வினாடிக்கு 6 பைசா கட்டணம் விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இது பிஎஸ்என்எல் 4ஜி-க்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பிஎஸ்என்எல் எப்போதும் தேசத்தின் சேவையில் ஈடுப்பட்டு வருகிறது. மற்ற நிறுவனங்களை போன்று தங்களது போட்டிக்கு லாபத்திற்கும் ஏற்றவாறு மாற்றங்களை மேற்கொள்ளாமல் வாடிக்கையாளர்களுக்காக செயல்ப்பட்டு வருவதால் IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.