பாதியை கூட எட்டாத ஏர்டெல்; அவுட் ஆஃப் கவரேஜ் பிஎஸ்என்எல்: கிங்மேக்கர் ஜியோ!!

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (13:45 IST)
டிராய் 4ஜி நெட்வொர்க் சேவையில் சிறந்த கவரேஜ் கொடுக்கும் நிறுவனம் எதுவென அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 4ஜி நெட்வொர்க் சேவையில் சிறந்த கவரேஜ் கொடுக்கும் நிறுவனம் எதுவென அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு... 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் 7.46 லட்சத்துக்கும் மேற்பட்ட 4ஜி பேஸ் ஸ்டேஷன்கள் உள்ளதால், சிறந்த கவரேஜ் கொடுத்து 4ஜி சேவையில் முன்னிலையில் உள்ளது ஜியோ. 
அடுத்து ஏர்டெல் 4ஜி கவரேஜ் ஜியோவை விட பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் இதனை அதிகரிப்பதற்கான விடா முயற்சியில் ஏர்டெல் செயல்பட்டு வருகிறது. அதன்படி இதன் வளர்ச்சி மும்மடங்கு வளர்ந்துள்ளது. 
 
வோடபோன் ஐடியா நிறுவனத்தை பொறுத்த வரை 4ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் மிக உயர்ந்த அளவை கொண்டுள்ளது. அதாவது ஜியோவின் 1.5 மடங்கை கொண்டுள்ளது. இருப்பினும் வளர்ச்சி ஜியோவை விட குறைவாகவே உள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வளர்ச்சி 62% ஆக உள்ளது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை இன்னும் செயல்படுத்தாத காரணத்தால் இந்த போட்டியை பொருத்த வரையில் பிஎஸ்என்எல் அவுட் ஆஃப் கவரேஜ்ஜில் உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்