இந்தியாவில் முதல் ஐந்து இடத்தில் உள்ள சிறந்த சம்பள வங்கி கணக்கு திட்டங்கள்
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (13:36 IST)
அரசு மற்றும் தனியார் என அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் தற்போது வங்கி கணக்குகள் வாயிலாகவே வழங்கப்படுகிறது.
ஒரு நிறுவனம் வெவ்வேறு வங்கிகளுடன் தொடர்பு கொண்டு பணியாளர்களுக்கு சம்பள கணக்குகளை அளிக்கலாம். ஆனால் ஒவ்வொரு கணக்கு மற்றும் வங்கிகளிலும் சம்பளத்தைப் பொருத்து கணக்கின் அம்சங்கள் மற்றும் பிற முறைகள் மாறும்.
பல தனியார் வங்கிகளில் சம்பள கணக்குகள் அளிக்கின்றன, ஆனால் அதில் பணியாளர்களின் சம்பளத்தைப் பொருத்து சலுகைகள் மற்றும் நன்மைகள் மாறும்.
ஐசிஐசிஐ சம்பள கணக்கு:
ஐசிஐசிஐ சம்பளம் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக எந்தக் கட்டணமும் இல்லாமல் டிடி, செக் போன்ற பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
ஐசிஐசிஐ வங்கி ஓய்வூதிய நிதி ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பதிவுசெய்துள்ளதுடன் நேஷன்ல் பென்சன் திட்டம் போன்ற சேவைகளைப் பெரிய நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
டெபிட் கார்டு போன்றவற்றை இழந்துவிட்டால் எந்தவொரு நிர்பந்தமும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை பாதுகாப்பு அளிக்கும் வசதி உள்ளது.
எச்டிஎஃப்சி சம்பள கணக்கு:
எச்டிஎஃப்சி சம்பளம் கணக்கில் ரூ .1 லட்சம் இலவச தனிப்பட்ட விபத்து மரணம் காப்பீடு உள்ளது.
பீரிமியம் சம்பள கணக்குகளில் இலவச போஜ்ஜியம் இருப்பு நிலையில் கணக்கை பராமரிக்க இயலும்.
அதுமட்டும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களுக்கான குடும்ப சம்பள கணக்கு வசதியும் உள்ளது.
சிடி பேங்க்:
தனிநபர்கள் சிடி பேங்க் சம்பள கணக்கில் எடுக்கக் கூடிய தொகை ஏதும் இல்லை என்றாலும் 5 மடங்குகள் கடனாக பெறலாம்.
தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றில் தகுதி இருந்தால் வெகுமதி புள்ளிகள் போன்றவற்றைப் பெறலாம்.
எஸ்பிஐ சம்பளம் கணக்கு:
பெருநிறுவன அல்லது நிறுவனங்கள் தங்கள் வங்கிகளில் வைத்துள்ள வணிக உறவைப் பொருத்து எஸ்பிஐ சம்பள கணக்குகளுக்குச் சிறப்பு சலுகையாக திருத்தியமைக்கக் கூடிய சலுகைகளை வழங்குகிறது.
ஆக்ஸிஸ் பேங்க்:
எச்டிஎஃப்சி வங்கியைப் போல ஆக்ஸிஸ் வங்கியிலும் மாத சம்பளத்தைப் பொருத்து வெவ்வேறு கணக்கை அளிக்கிறது.
எளிதாக அணுகல் சம்பளம் கணக்கு, டிஃபன்ஸ் சம்பளம் கணக்கு, ப்ரைம் சம்பள கணக்கு எனப் பல சம்பள கணக்கு வசதிகளை ஆக்ஸிஸ் வங்கி அளிக்கிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்