வருமான வரி கேள்விகள்: லைவ் சாட் அறிமுகம்!!

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (15:33 IST)
வருமான வரித்துறை குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள லைவ் சாட் என்னும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 


 
 
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையமான CBDT வருமான வரி செலுத்துபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நேரடி வரி குறித்த சந்தேகங்களை சாட் மூலம் ட்தெளிவுபடுத்தும் புதிய சேவையை கொண்டுவந்துள்ளது. 
 
இந்த லைவ் சாட் சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
 
நேரடி வரி செலுத்துவதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் https://incometaxindiaefiling.gov.in/ இணையதளம் மூலம் லைவ் சாட் சேய்து தீர்வு காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்